சுடச்சுட

  

  சமூகவலைதளத்தில் எனது பெயரில் போலி கடிதம்: தேர்தல் ஆணையத்திடம் ஜோஷி புகார்

  By DIN  |   Published on : 16th April 2019 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mmj

  சமூகவலைதளத்தில் பாஜகவை விமர்சித்து தமது பெயரில் போலி கடிதம் வெளியாகியிருப்பதாகவும், இதை வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி புகார் அளித்துள்ளார்.
   பாஜகவின் மற்றோர் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு ஜோஷி எழுதியது போன்ற கடிதம், சமூகவலைதளத்தில் வெளியாகி பரவி வருகிறது. அதில் பாஜக தலைமையையும், தேர்தல் முடிவுகள் குறித்தும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இந்நிலையில், தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை முரளி மனோகர் ஜோஷி திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது சமூகவலைதளத்தில் வெளியாகியிருப்பது போன்ற கடிதம் எதையும் தாம் எழுதவில்லை என்றும், அது போலியான கடிதம் என்றும் ஜோஷி புகார் மனு அளித்தார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
   சமூகவலைதளத்தில் அத்வானிக்கு நான் எழுதியது போன்ற கடிதம் பரவி வருவதாக ஊடகத்தில் இருக்கும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அதை நான் படித்து பார்த்தேன். அதை எனது புகார் மனுவுடன் இணைத்துள்ளேன்.
   இதுபோன்ற கடிதம் எதையும் அத்வானிக்கு நான் எழுதவில்லை. ஆதலால் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அந்த கடிதம் யாரால் தயாரிக்கப்பட்டது, சமூகவலைதளத்தில் யாரால் வெளியிடப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
   மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோருக்கு பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் இருவரும் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
   இந்த சூழ்நிலையில், அத்வானிக்கு பாஜக தலைமையை விமர்சித்தும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் ஜோஷி எழுதியது போன்ற கடிதம், சமூகவலைதளத்தில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai