சுடச்சுட

  

  50% வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க கோருவது நியாயமில்லை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

  By DIN  |   Published on : 16th April 2019 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  km

  தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளில் 50 சதவீதத்தை சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை விடுப்பது நியாயமில்லை என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
   வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் இல்லாமலேயே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் நம்பகமானவை ஆகும். இதை நான் மட்டும் உறுதி செய்யவில்லை, தொழில்நுட்ப வல்லுநர்களும் உறுதி செய்துள்ளனர்.
   அந்த இயந்திரத்தில் இதுவரை யாரும் தவறு கண்டுபிடித்ததில்லை. அந்த இயந்திரங்களை இயக்குவதில் சில மனித தவறுகள் நிகழ முடியும்.
   உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, 50 சதவீத வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை சரி பார்க்க கோருவதில் நியாயமில்லை.
   தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்ப்பது போதாது, 100 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும்.
   அதுபோல் 100 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்த்தாலும், பிறகு அது தேவையில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும். இதுவொரு முடிவில்லாத விளையாட்டு, மேலும் துரதிருஷ்டவசமானது.
   ஆதலால், சட்டத்தை மதிக்க எதிர்க்கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.
   தேர்தல் காலத்தில் வன்முறை, கூலிப்படை அட்டூழியம், வெறுப்புணர்வு பரவியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் வாக்குச்சீட்டு அடிப்படையில் மீண்டும் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து அரசியல் கட்சிகள் சிந்தித்து பார்க்கவில்லை என நினைக்கிறேன் என்றார் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai