எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ததாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

ராஞ்சி: எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ததாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடெங்கும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிற மக்களவைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிர தேர்தல் பிரசாரத்தில் விலங்குகளும் விடுபடவில்லை. அவைகளும் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக எருமைகளில் பிரசார வாசகம்  எழுதப்பட்டு பிரசாரம் நடைபெற்றுள்ளது. எருமையொன்றின் மேல் “காங்கிரசை தேர்வு செய்யுங்கள். காங்கிரசுக்காக வாக்களியுங்கள்,” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.அத்துடன்  காங்கிரஸ் கட்சியின் சின்னமும் வரையப்பட்டிருந்தது. அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில்  வைரலாகப் பரவியது.

ஆனால் தேர்தல் ஆணையம், விலங்குகளை காட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com