சுடச்சுட

  

  மருத்துவமனையில் சசி தரூர்: நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நிர்மலா சீதாராமன்

  By PTI  |   Published on : 16th April 2019 03:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shashi


  திருவனந்தபுரம்: கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

  திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சசி தரூர், நேற்று தலையில் அடிபட்டு திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  திருவனந்தபுரத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற நிர்மலா சீதாராமன், சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். இது குறித்த தகவலை சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai