சுடச்சுட

  

  ‘எல்லா மோடிகளும் திருடர்கள்’: ராகுல் பேச்சுக்கு பிரதமர் கடும் கண்டனம் 

  By PTI  |   Published on : 16th April 2019 05:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_theni

   

  கோர்பா (சட்டீஸ்கர்): எல்லா மோடிகளும் திருடர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  திங்கள் அன்று தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'ஏன் மோடி என்று பெயர் கொண்டவர்கள் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்?' என்று பேசியிருந்தார். 

  இந்நிலையில் எல்லா மோடிகளும் திருடர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:

  பரம்பரையாக ஆட்சி செய்து வருபவர்கள் இத்தகைய தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்துவது என்பது ஒரு நாகரீகமாகி விட்டது. இப்படித்தான் பேசுவதா? இத்தகைய நபர்களை நாம் விலக்கி வைக்க வேண்டும். மோசமான பேச்சு என்பது அவர்களின் இயல்பாகவே ஆகிவிட்டது.

  இந்தப் பகுதியில் உள்ள சஹு இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் குஜராத்தில் மோடி என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாரும் திருடர்களா என்ன?

  இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.         

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai