காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ரஃபேல் விவகாரம் குறித்து விசாரணை

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று
காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ரஃபேல் விவகாரம் குறித்து விசாரணை

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
 மகாராஷ்டிர மாநிலம், பல்தானா தொகுதியில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சரத் பவார் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். அந்த விவகாரத்தில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் வரையில் ஓய மாட்டோம். இதேபோல், விவசாயிகள் பிரச்னைக்கும் தீர்வு காண்போம்.
 விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதுடன், விவசாய பொருள்களுக்கு 1.5 மடங்கு அதிகமாக கூடுதல் விலை அளிப்போம். இதை அறிவிப்போடு நிறுத்த மாட்டோம். அனைத்தையும் செயல்படுத்துவோம். காங்கிரஸ் கூட்டணி அரசு இதற்கு முன்பும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் எந்த சமரசத்தையும் காங்கிரஸ் கூட்டணி செய்யாது.
 மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆதலால் மக்களவைத் தேர்தல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தவும், மோடி அரசை ஆட்சியில் இருந்து அகற்றவும் மக்கள் தயாராக வேண்டும் என்றார் சரத் பவார். இந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com