கூட்டணி விவகாரம்: ஆம் ஆத்மி-காங். நாளை மீண்டும் பேச்சு?

மக்களவைத் தேர்தலில், தில்லி, ஹரியாணா மாநிலங்களில் கூட்டணி அமைப்பதற்காக, ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த
கூட்டணி விவகாரம்: ஆம் ஆத்மி-காங். நாளை மீண்டும் பேச்சு?

மக்களவைத் தேர்தலில், தில்லி, ஹரியாணா மாநிலங்களில் கூட்டணி அமைப்பதற்காக, ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற இருக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலும், ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்கும் பங்கேற்க இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கோர இருப்பதாகத் தெரிகிறது.
 மக்களவைத் தேர்தலையொட்டி, தில்லி, ஹரியாணாவில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. முதலில் தில்லியில் மட்டும் கூட்டணி அமைப்பதாகப் பேசி வந்த ஆம் ஆத்மி பின்னர், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் தங்களுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால், ஆம் ஆத்மியுடன் தில்லியில் மட்டுமே கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகக் காங்கிரஸ் அறிவித்தது. ஆம் ஆத்மி சம்மதிக்காததால், இரு கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியது.
 இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் இருந்து நாட்டைக் காப்பதற்கு எதையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
 பின்னர், தில்லியில் 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட விரும்புவதாக கேஜரிவால் கூறியதாகக் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம், தில்லியில் ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகளை விட்டுத்தர தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com