சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளால் வெல்ல முடியாத 11 தொகுதிகள்!

சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளால் வெல்ல முடியாத 11 தொகுதிகள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முக்கிய அரசியல் கட்சிகளாக விளங்கும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், குறிப்பிட்ட 11 மக்களவை தொகுதிகளில் மட்டும் இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முக்கிய அரசியல் கட்சிகளாக விளங்கும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், குறிப்பிட்ட 11 மக்களவை தொகுதிகளில் மட்டும் இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை.
 உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் தனித்தும், பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் பலமுறை ஆட்சியமைத்துள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட 11 மக்களவைத் தொகுதிகளில் மட்டும் இதுவரை அந்த 2 கட்சிகளும் ஒருமுறை கூட வென்றதில்லை.
 அந்த 11 தொகுதிகளில் தலைநகர் லக்னௌ மக்களவைத் தொகுதி, வாராணசி மக்களவைத் தொகுதி, காங்கிரஸ் கட்சிகளின் கோட்டைகளாக கருதப்படும் அமேதி, ரேபரேலி ஆகியவை முக்கியத் தொகுதிகள் ஆகும்.
 இதுதவிர்த்து, பாக்பத், பைரேலி, பிலிபித், கான்பூர், மதுரா, ஹாத்ராஸ், குஷிநகர் ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும் சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை.
 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
 இந்த 11 தொகுதிகளில், ரேபரேலி, அமேதி ஆகியவற்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 இதனால் அந்தத் தொகுதிகளில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. பாக்பத், மதுரா தொகுதிகள், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 7 தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி போட்டியிடுகிறது. இருப்பினும், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் லக்னௌவில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
 கடந்த 1998, 1999, 2004ஆம் ஆண்டு தேர்தலில், லக்னௌ தொகுதியில் பாஜகவின் மறைந்த மூத்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் வென்றார். 2009, 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் லால்ஜி தாண்டன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் லக்னௌவில் வென்றனர். கான்பூர் தொகுதியிலும் இதே நிலைதான். 1999-2009ஆம் ஆண்டுகளில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் எம்பியாக இருந்தார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வென்றார். வாராணசி தொகுதியில் 1999இல் பாஜகவின் ஷங்கர் பிரசாத் ஜெய்ஷ்வால், 2004இல் காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா, 2009இல் முரளி மனோகர் ஜோஷி எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 2014இல் பிரதமர் நரேந்திர மோடி வென்றார்.
 பிலிபித் தொகுதியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, 1999, 2004, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்றிருந்தார். 2009இல் வருண் காந்தி வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com