சுடச்சுட

  

  இந்தியாவுடனான வர்த்தகம் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: சீன துணைத் தூதர்

  By DIN  |   Published on : 17th April 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையிலான வர்த்தக உறவையே சீனா விரும்புகிறது என்று அந்த நாட்டின் துணைத் தூதர் ஜா லியூ தெரிவித்துள்ளார்.
   மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் ஜா லியூ பேசியதாவது:
   இந்தியாவுடன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இரு நாடுகளும் சமமாக பயனடையும் வகையிலான வர்த்தகச் செயல்பாடுகளையே சீனா விரும்புகிறது. இந்தியா-சீனா இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்தவும், பொருளாதார உறவை மேம்படுத்தவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயுள்ள வர்த்தக உறவை வலுப்படுத்த முதலில் சாதகமான சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்.
   அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் வகையில், பொருளாதார வழித்தடத்தை கட்டமைக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இன்னும் சில நாள்களில், சீனாவில் பொருளாதார வழித்தட மாநாடு நடைபெற உள்ளது. அதில் 40 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
   இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் நடக்கவிருக்கும் ஏற்றுமதி-இறக்குமதி மாநாட்டில் இந்தியா பங்கு கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் நடைபெறும் வர்த்தக மாநாட்டில் சீனாவின் 6 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதேபோன்ற மாநாடு, சீனாவில் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா பங்கு கொள்ள வேண்டும். இவ்வாறு இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுற்ற பின்னர், சீனா உள்கட்டமைப்பு முதலீட்டு துறை, மேற்கு வங்கத்துக்கு முதலீடு குறித்த ஆலோசனை வழங்குவதற்காக வரவுள்ளனர் என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai