சுடச்சுட

  

  இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகம் மீண்டும் தொடக்கம்

  By  பூஞ்ச்/ஜம்மு,  |   Published on : 17th April 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலாகோட் வரையிலும் கடந்த 2 வாரங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் வாகனப் போக்குவரத்து மற்றும் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மீண்டும் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது.
   இதைத்தொடர்ந்து, எல்லைக்கட்டுபாட்டுக் கோட்டை கடந்து நேற்று ஒரே நேரத்தில் 70 சரக்கு லாரிகள் எல்லையைக் கடந்து பொருள்களை ஏற்றி சென்றது. பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகியிருந்த வணிகர்கள், மீண்டும் வர்த்தகம் தொடங்கியதால் உற்சாகமடைந்துள்ளனர்.
   கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி எல்லைக்கட்டுபாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பூஞ்ச் பகுதியில் பிஎஸ்எஃப் வீரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பாதுகாப்புப் படையினர் உள்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.
   இதன் காரணமாக பூஞ்ச்- ராவலாகோட் பகுதிகளுக்கிடையே நடைபெற்று வந்த பயணிகள் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
   தற்போது, மீண்டும் போக்குவரத்து தொடங்கியதால் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்து 35 லாரிகள் மூலம் உலர் பேரீச்சை, பாதாம் மற்றும் எம்ப்ராய்டரி துணி வகைகள், ஆயுர்வேத மூலிகைகள், கிழங்கு, பிஸ்தா போன்றவை கொண்டு செல்லப்பட்டன. மறு மார்க்கத்தில் பூஞ்ச் பகுதியில் இருந்து சுமார் 35 லாரிகள் மூலம் சீரகம், பழங்கள், மூலிகைகள் மற்றும் பல்வேறு பொருள்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
   இந்த சரக்கு லாரிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை மதியம் இருநாட்டின் எல்லையிலுள்ள சக்கன்-டா-பாக் வணிக வசதி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
   அங்கிருந்து வணிகம் மேற்கொள்ளப்பட்டு சரக்கு லாரிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai