சுடச்சுட

    

    உ.பி.யில் சிறப்பான பணிக்கு அங்கீகாரம்: மக்களவைத் தேர்தலில் அமைச்சர்கள் 4 பேருக்கு பாஜக வாய்ப்பு

    By DIN  |   Published on : 17th April 2019 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்கள் 4 பேரின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு போட்டியிட பாஜகவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
    உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில், ரீட்டா பகுகுணா ஜோஷி, சத்யதேவ் பச்சௌரி, எஸ்.பி. சிங் பகேல், முகுத் பிகாரி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் 4 பேரின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மக்களவைத் தேர்தலில் அவர்களை வேட்பாளர்களாக பாஜக களமிறக்கியுள்ளது.
    இதில் ரீட்டா பகுகுணா ஜோஷி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் லக்னௌ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை அலாகாபாத் தொகுதி வேட்பாளராக பாஜக தற்போது களமிறக்கியுள்ளது.
    இதேபோல், கான்பூர் தொகுதி வேட்பாளராக அமைச்சர் சத்யதேவ் பச்சௌரி, ஆக்ரா தனித் தொகுதி வேட்பாளராக எஸ்.பி. சிங் பாகேல், அம்பேத்கர் நகர் தொகுதி வேட்பாளராக அமைச்சர் முகுத் பிகாரி ஆகியோரை தனது வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
    கோரக்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜவாதி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவரும், பாஜகவில் அண்மையில் இணைந்தவருமான பிரவீண் நிஷாத், சாந்த் கபீர் நகர் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. சந்த் கபீர் நகர் தொகுதி எம்.பி.யும், அண்மையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை காலணியால் தாக்கி சர்ச்சையில் சிக்கியவருமான சரத் திரிபாதிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் அவரது தந்தையான 
    ரமாபதி ராம் திரிபாதியை தேவ்ரியா தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai