சுடச்சுட

  
  ps

  காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா அண்மையில் சேர்ந்த நிலையில், அவரது மனைவி சமாஜவாதி கட்சியில் இணைந்துள்ளார்.
   மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பளிக்கப்படாததால், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சத்ருகன் சின்ஹா அண்மையில் இணைந்தார். இதையடுத்து பிகார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார்.
   இந்நிலையில், சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா, சமாஜவாதி கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார். இதுகுறித்து சமாஜவாதி கட்சி சார்பில் சுட்டுரை பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சமாஜவாதி கட்சியில் பூனம் சின்ஹா இணைந்துள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும், எம்பியுமான டிம்பிள் யாதவுடன் பூனம் சின்ஹா எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமாஜவாதி கட்சி வெளியிட்டுள்ளது.
   லக்னௌ மக்களவைத் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை சமாஜவாதி இன்னமும் அறிவிக்கவில்லை. அந்தத் தொகுதியில் சமாஜவாதி வேட்பாளராக பூனம் சின்ஹா போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai