சுடச்சுட

  
  AHMED_PATELB

  பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் முன்னாள் பிரதமராகி விடுவார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார்.
   குஜராத் மாநிலம், வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இதுகுறித்து அவர் பேசியதாவது:
   குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 12 முதல் 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். பாஜக அரசின் கொள்கைகளால், மக்கள் கொடுமைக்கு ஆளாகினர். ஆனால் அதை மூடி மறைக்க பார்க்கிறது பாஜக. இந்த முறை பாஜகவை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவை மக்கள் தோற்கடிப்பார்கள்.
   மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23இல் வெளியாகிறபோது, மோடி முன்னாள் பிரதமராகி விடுவார். தேர்தலுக்குப் பிறகு, பிரதமராக யார் பொறுப்பேற்பது என்பது குறித்து மகா கூட்டணி முடிவு செய்யும். தேர்தல் பிரசாரத்தின்போது தேசியவாதம் குறித்தும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்தும் பாஜக பேசுகிறது. இந்த 2 விவகாரங்களிலும் காங்கிரஸுக்கு பாஜக அறிவுரை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளனர். அப்படியிருக்கையில், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து காங்கிரஸுக்கு பாஜக பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. தீவிரவாத விவகாரத்தில் பாஜக அரசியலைத் தேடுகிறது என்றார் அகமது படேல்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai