35ஏ, 370-ஆவது சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்துள்ள 35ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வலியுறுத்தியுள்ளார்.
35ஏ, 370-ஆவது சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்துள்ள 35ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வலியுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
 இந்தியாவுடன் கடந்த 1948ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரை அப்போதைய மகாராஜா இணைத்தார். அப்போது ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சில வாக்குறுதிகளை அளிக்கும் வகையில், 35ஏ மற்றும் 370ஆவது சட்டப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை பார்க்கையில், நிரந்தரமானது போன்று தெரிகிறது. நாட்டுடன் ஜம்மு-காஷ்மீரை இணைக்கும் பின்னணியில் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தற்போது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகி விட்டது. ஆதலால், ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து அளிப்பது சாத்தியமில்லை. பிற மாநிலங்களைப் போலவே, ஜம்மு-காஷ்மீர் நடத்தப்பட வேண்டும். எனவே 35ஏ மற்றும் 370 ஆகிய சட்டப் பிரிவுகள் நீடிப்பது சரியல்ல. இந்த சட்டப் பிரிவுகளால், நாட்டுக்கு அதிக அளவில் பிரச்னைகள்தான் ஏற்படுகின்றன. எனவே அந்த சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என நினைக்கிறேன்.
 கடந்த 70 ஆண்டுகளாக அந்த 2 சட்டப்பிரிவுகள் அமலில் இருந்தன. எந்த நோக்கங்களுக்காக அந்த சட்டப் பிரிவுகள் கொண்டு வரப்பட்டனவோ, அந்த நோக்கங்கள் நிறைவேறிவிட்டன. ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியில்லை என்று இனிமேல் தெரிவிக்க முடியாது. இதை கருத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அந்த 2 சட்டப்பிரிவுகளுக்கு இனிமேலும் இடம் கொடுக்கக் கூடாது என்றார் சந்தோஷ் ஹெக்டே.
 370ஆவது சட்டப் பிரிவு மூலம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. 35ஏ சட்டப் பிரிவு மூலம், ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்கவும், சொத்துகள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அந்த 2 சட்டப் பிரிவுகளும் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com