சுடச்சுட

  
  vasunthara

  ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிப்பதாக இப்போது வாக்குறுதி அளிக்கும் காங்கிரஸ், 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது? என்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே கேள்வியெழுப்பியுள்ளார்.
   ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக, ஆண்டுதோறும் ரூ. 72, 000 அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
   இதைக் குறிப்பிட்டு, ராஜஸ்தான் மாநிலம், சிகார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து வசுந்தரா ராஜே செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
   வயதான ஏழை மூதாட்டியை கட்டியணைத்து, ஏழைகளுக்கு ஆதரவளிப்பது போல ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துள்ளார். அதை வைத்து, காங்கிரஸ் விளம்பரம் செய்து வருகிறது. ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் என்ற வாக்குறுதியை இப்போது அளிக்கும் காங்கிரஸ், 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது?
   நிலக்கரி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட அனைத்து வகையான ஊழல்களிலும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஈடுபட்டது.
   ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும், அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்டங்கள், முறையாக செயல்படுத்தப்படாததால், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார் வசுந்தரா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai