சுடச்சுட

  

  மறுக்கப்பட்ட நிதியுதவி: முழுமையாக சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் 

  By DIN  |   Published on : 17th April 2019 09:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jet airways

   

  புது தில்லி: புதிதாய் முதலீட்டாளர்கள் யாரும் நிதியுதவி அளிக்க மறுத்து விட்ட காரணத்தால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்  முழுமையாக சேவையை நிறுத்தி விட்டது.

  சமீப காலமாக கடன் சுமையால் பாதிப்படைந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் படிப்படியாக தனது சேவையை துண்டிக்க தொடங்கியது. ஒருகட்டத்தில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்த நிலையில், அந்த நிறுவனம் வங்கிகளிடம் கடன் கோரியது.

  ஆனால் அது கேட்ட முதல்கட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதைத்த தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

  மும்பையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸுக்கு செல்லும் விமான சேவைதான் கடைசியாக இருக்கும் என அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக 5 விமானங்களை மட்டுமே அந்த நிறுவனம் இயக்கி வந்தது என்பது இங்கே  குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai