சுடச்சுட

  

  'தலித்' என்பதால் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவரானார்: காங்கிரஸ் முதல்வர் சர்ச்சைப் பேச்சு

  By DIN  |   Published on : 17th April 2019 05:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Congress-Ashok_Gehlot

   

  தலித் என்பதால் தான் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவரானார் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறியதாவது:

  குஜராத் மாநிலத்தில் தேர்தல் வருவதால் இங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பாஜக பயத்தில் உள்ளது. தலித் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும் முக்கிய காரணம் அவர் பாஜக தலித் பிரிவு தலைவர் என்பதாலும் தான். ஏனென்றால் நாட்டிலுள்ள தலித் வாக்கு வங்கியை கைப்பற்றவே பாஜக இம்முயற்சியை கையாண்டது.

  இதனால் தான் பாஜக-வின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு குடியரசுத் தலைவர் பதவி மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பலர் இதற்கு தகுதியானவர்களாக இருந்தும் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.

  இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அசோக் கெலாட்டின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  முன்னதாக, 2017-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்ட சில தினங்களில், அவர் இப்பதவிக்கு தகுதியானவர் கிடையாது என்று நான் குறிப்பிடமாட்டேன். ஆனால், பாஜக-வின் இந்த தேர்வு குறித்து எதிர்கட்சிகளுடன் ஆலோசித்தபோது அவர்களும் ஆச்சரியப்பட்டனர். 

  மேலும் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் இருக்கும் சூழலில் தலித் என்ற ஒரே காரணத்துக்காக தான் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai