சுடச்சுட

  
  rahul_at_wayanad

   

  வயநாடு மக்களுடன் வாழ்நாள் உறவு ஏற்படுத்திக்கொள்ளவே அங்கு போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் உருக்கமாகப் பேசினார்.

  காங்கிரஸ் தலைவர் ராகுல், சொந்த அமேதி தொகுதி மட்டுமல்லாது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளில் அவர் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில், வயநாடு தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் உருக்கமாக உரையாற்றியதாவது:

  நான் பிரதமர் நரேந்திர மோடி போன்று கிடையாது. இங்கு வந்து உங்களிடம் பொய் பேச விரும்பவில்லை. ஏனென்றால், உங்களின் திறமை, அறிவு மற்றும் புரிதல் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். வெறும் இரு மாத உறவுக்காக நான் இங்கு போட்டியிடவில்லை. உங்களுடன் வாழ்நாள் முழுவதுக்குமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவே இங்கு களமிறங்கியுள்ளேன்.

  இங்கு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தாலும், அனைத்து மதம் மற்றும் சாதியினர் ஒற்றுமையுடன் உள்ளீர்கள். இதுபோன்று அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு கேரளா தான் சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடியுள்ளோம். ஒருவரே இந்நாட்டை ஆள நினைக்கும் நிலையை எதிர்த்து போராடுகிறோம். 

  நான் இந்த நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். ஆனால், இங்கு மட்டும்தான் பலதரப்பட்ட குரல்களும், தத்துவங்களும், சித்தாந்தங்களும் ஒன்றிணைந்து பண்முகத்தன்மை இருப்பதை பார்க்கிறேன். நான் இங்கு ஒரு அரசியல்வாதியாக வரவில்லை. உங்களின் சகோதரனாக, மகனாக வந்துள்ளேன். உங்களின் மனங்களில் உள்ளதை புரிந்துகொண்டு அதன்படி செயல்பட விரும்புகிறேன் என்றார்.

  முன்னதாக, வயநாடு தொகுதியில் அமைந்துள்ள திருநெல்லி கோயிலில் தனது தந்தை ராஜீவ் அஸ்தியை கரைத்து சிறப்பு பித்ரு பூஜைகளை மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai