காஷ்மீர்: கிஷ்துவாரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்துவாரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொல்லப்பட்டதையடுத்து, கடந்த ஒரு வாரமாக பிறக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பகலில் மட்டும் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்துவாரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொல்லப்பட்டதையடுத்து, கடந்த ஒரு வாரமாக பிறக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பகலில் மட்டும் செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது.
 கிஷ்துவார் நகரில் உள்ள மருத்துவமனையில் பயங்கரவாதிகள் கடந்த 9-ஆம் தேதி நடத்திய தாக்குதலில், அந்த பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி சந்திரகாந்த் சர்மா மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதையடுத்து அந்த பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. அதனால் கிஷ்துவார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பகலில் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாவட்ட மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்டதால், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்காக கிஷ்துவார் மற்றும் அந்த நகரை சுற்றியுள்ள இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சோதனை அடிப்படையில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை தளர்த்தப்பட்டது. அப்போது ஒரு சில இடங்களில் மட்டும் மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதாக தகவல் கிடைத்தது.
 கிஷ்துவாரில் நிலைமை இப்போது சீரடைந்துள்ளதால், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பகலில் மட்டும் நீக்கப்பட்டது. எனினும், எவ்வித பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்க கிஷ்துவார் முழுவதும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 கிஷ்துவாரில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாது என்பதை உறுதி செய்யும் வரை இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com