
வியாழக்கிழமை நடைபெறவிருந்த திரிபுரா (கிழக்கு) மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு நிலைமையைக் காரணமாகக் கூறி, திரிபுரா (கிழக்கு) தொகுதிக்கான தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
திரிபுரா தலைமைத் தேர்தல் அதிகாரி, சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிக்கை அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பதாக திரிபுரா காங்கிரஸ் கூறியது. திரிபுராவில் கடந்த 11ஆம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...