மக்களவை ஆறாவது கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு தொடர்பான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு தொடர்பான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
 7 மாநிலங்களைச் சேர்ந்த 59 மக்களவைத் தொகுதிகளுக்கான ஆறாவது கட்ட தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏழு கட்டமாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கி வரும் மே 19ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதில் தில்லியில் அமைந்துள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 12-ஆம் தேதி ஆறாவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆறாவது கட்ட தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கை வருமாறு:
 ஆறாவது கட்ட தேர்தல் பிகார், உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெற உள்ள நிலையில் அங்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 24ஆம் தேதி கடைசி நாள். அதே நாளில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பப் பெற 26ஆம் தேதி கடைசி நாள். 6-ஆம் கட்ட தேர்தலையொட்டி, மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
 பிகார் மாநிலத்தில் வால்மீகி நகர், பாஷிம் சாம்பரன், பூர்வி சாம்பரன், ஷியோகர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன் மற்றும் மஹராஜ்கஞ்ச் தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், சரஸ்வதி, தோமரியாகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், ஆசம்கர், ஜோன்பூர், மச்சீலீஸ்கர் மற்றும் பாதோஹி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் திகம்பர், தாமோ, கஜுராஹோ, சிந்த்வாரா, ஹோசங்காபாத் ஆகிய தொகுதிகளுக்கும் அதேநாளில் தேர்தல் நடைபெறும். இதேபோல, தில்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் அதே தினத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com