ஒடிஸா முதல்வரின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டரை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.


ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டரை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
இது தொடர்பாக, நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
ஒடிஸாவின் ரூர்கேலா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, முதல்வர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் வந்தார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், அதைச் சோதனை செய்ய தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் அனுமதி கோரினர். அதற்கு பட்நாயக் அனுமதி அளித்ததையடுத்து, அவரது ஹெலிகாப்டரையும், உடைமைகளையும் அவர்கள் சோதனை செய்தனர் என்று அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சோதனைக்கு நவீன் பட்நாயக் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், சோதனை முடியும் வரை ஹெலிகாப்டரிலேயே அவர் காத்திருந்ததாகவும் பிஜூ ஜனதா தள கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தேர்தல் பணியின் ஒரு பகுதியாகவே நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டர் சோதனையிடப்பட்டதாகவும், தனிப்பட்ட நபரைக் குறிவைத்து இந்தச் சோதனை நடைபெறவில்லை எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஹெலிகாப்டரையும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com