ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின், ஹெச்.ராஜா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு

தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின், ஹெச்.ராஜா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு

தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலர் ஆர்வமுடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனி தொகுதியில் உள்ள பெரியகுளம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரி வளாக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

;சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வாக்குப்பதிவு செய்தார்.

சிவகங்கை தொகுதியில் காரைக்குடி வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகனும் சிவகங்கை தொகுதி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் தனது மனைவி மற்றும் தாயார் உடன் சென்று வாக்களித்தார்.

விழுப்புரம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா, எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் ஆகியோர் வாக்களித்தனர்.

சென்னை நந்தனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தயாநிதி மாறன் வாக்களித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com