சுடச்சுட

  

  பிரதமர் மோடியின் இணையதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை…!

  By DIN  |   Published on : 21st May 2019 04:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ec


  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று இணையதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

  பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை தொண்ட "மோடி- ஜார்னி ஆப் எ காம்மன் மேன்" என்ற வரலாற்றுத் தொடரை ஈராஸ் நவ் என்ற நிறுவனம் தயாரித்து தனது இணையதளத்திலேயே ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.

  17-வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்தத் தொடரை மக்களவைத் தேர்தல் முடியும் வரை ஒளிபரப்பக் கூடாது என ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

  மேலும், அந்தத் தொடர் சம்பந்தப்பட்ட அனைத்தையும் இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதுடன், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai