மீண்டும் போர் விமானத்தை இயக்கும் பணியில் இணைய உள்ளார் அபினந்தன்

பாகிஸ்தான் எல்லையில் விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானத்தில் இருந்த விங் கமாண்டர் அபினந்தன் வர்தமான், மீண்டும் போர் விமானத்தை இயக்கும் பணியில் விரைவில் இணைய உள்ளார்.

பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிடியுட் ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அளித்திருக்கும் அனுமதியைத் தொடர்ந்து அவர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பணியில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

35 வயதாகும் அபினந்தன், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய விமானப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி வரலாற்றில் இடம்பெற்ற அபினந்தன், இந்த தாக்குதலின் போது மிக்-21 விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரால் பாகிஸ்தான் எல்லையில் குதித்து, அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலையானார்.

இவருக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com