உ.பி. யில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது: 72 மணி நேர தடைக்குப் பின் யோகி ஆதித்யநாத் பிரசாரம்

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தல்களில் காங்கிரஸ், பகுஜன்சமாஜ்-சமாஜவாதி கூட்டணி ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள ஹனுமன் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்திய யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள ஹனுமன் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்திய யோகி ஆதித்யநாத்.


உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தல்களில் காங்கிரஸ், பகுஜன்சமாஜ்-சமாஜவாதி கூட்டணி ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மத ரீதியிலான கருத்துகளைத் தெரிவித்ததற்காக, யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் விதித்திருந்த 72 மணி நேரம் தடை உத்தரவு முடிவுக்கு வந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார். 
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 11 மற்றும் 18-ஆம் தேதிகளில் 16 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. 
இந்நிலையில், சம்பல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கைலாதேவி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதித்யநாத் பேசியதாவது:
மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் பாஜகவுக்கே அதிக வாக்கு பதிவாகியுள்ளன. இந்த தொகுதிகளில் காங்கிரஸ், பகுஜன்சமாஜ்-சமாஜவாதி-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி ஆகியவை ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. நான் மத ரீதியிலான கருத்துகளைக் கூறி வாக்குச் சேகரிக்கவில்லை. 
நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்தார். முஸ்லிம்கள் இணைந்து பகுஜன்சமாஜ்-சமாஜவாதி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்தார்.
சமாஜவாதியின் வேட்பாளர் ஆஸம் கானை நேரிடையாக குறிப்பிடாது, ஒருவர் அம்பேத்கரை பற்றியும், தாய் மற்றும் மகள்களை பற்றியும் தவறாக பேசினார். ஆனால் அவர்களுக்காக மாயாவதி வாக்கு சேகரிக்கிறார். 
அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செய்ய தயங்குபவரும், வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு தயங்குபவருமான ஒருவரை சம்பல் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக சமாஜவாதி நிறுத்தியுள்ளது.
உங்களது வாக்கு யாருக்காக என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். துரோகிகள், பயங்கரவாதிகள், இறை நம்பிக்கை அற்றவர்கள், வளர்ச்சிக்கு எதிராக, இளைஞர்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கா? அல்லது நாட்டின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாஜகவுக்கா? என்று சிந்திக்க வேண்டும் என்று ஆதித்யநாத் கூறினார்.
பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, லக்னெளவில் உள்ள அனுமன் கோயிலில் யோகி ஆதித்யநாத் வழிபாடு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com