காங்கிரஸில் இருந்து பிரியங்கா சதுர்வேதி விலகல்: சிவசேனையில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித்தொடர்பாளர், ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்த பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை விலகினார். 
மும்பையில், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோரது முன்னிலையில் அக்கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்த பிரியங்கா சதுர்வேதி.
மும்பையில், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோரது முன்னிலையில் அக்கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்த பிரியங்கா சதுர்வேதி.


காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித்தொடர்பாளர், ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்த பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை விலகினார். 
இதைத்தொடர்ந்து, சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியில் இணைந்தார்.
சில நாள்களுக்கு முன், உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட அதிருப்தியே பிரியங்கா சதுர்வேதியின் இத்தகைய முடிவுகளுக்கு காரணமாக அறியப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது குறித்து, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில வராங்களாக கட்சியில் நடைபெறும் விஷயங்களைப் பார்த்தால் எனது சேவைகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இதனால், நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இனியும் இக்கட்சியில் இருந்தேன் என்றால், எனது சுயமரியாதைக்கும், கெளரவத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதுகிறேன்.
என்னை மிகவும் வருந்தச் செய்த விஷயம் என்னவெனில், பெண்களின் பாதுகாப்பு, கெளரம், மகளிர் மேம்பாடு ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி ஊக்குவித்து வரும் நிலையில், அதை செயல்பாட்டில் காட்ட வேண்டும் என்ற உங்களது (ராகுல்) அழைப்பை கட்சியில் சிலரே கடைப்பிடிப்பதில்லை. 
நான் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது என்னிடம் தொண்டர்கள் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம், தேர்தலுக்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்ற சமரசத்தின் அடிப்படையில் புறம்தள்ளப்பட்டுள்ளது.
இதுதான், காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இருக்கும் வாய்ப்புகள் மீது நான் கவனம் செலுத்துவதற்கு இறுதியான காரணமாக அமைந்தது. ஆகவே, கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் கடமைகளில் இருந்து உடனடியாக என்னை விடுவிக்குமாறு உங்களிடம் (ராகுல்) கோரிக்கை வைக்கிறேன் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா சதுர்வேதியிடம் அத்துமீறியதற்காக காங்கிரஸில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த தொண்டர்கள், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மண்டல மேலிடப் பொறுப்பாளரான ஜோதிராதித்யா சிந்தியாவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கடந்த 15-ஆம் தேதி மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com