சுடச்சுட

  
  AnnaHazare1

  முறைகேடுகளைத் தடுக்க மிகப் பெரிய அளவில் தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை என்றும், கட்சிகளுக்கு சின்னம் தேவையில்லை என்றும் சமூக நல ஆர்வலர் அண்ணா ஹசாரே வலியுறுத்தினார்.
  மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
  தேர்தல் காலமான தற்போது பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்கள் ஏன் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்று புரியவில்லை. நாட்டுக்காக சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை இதுதானா?
  நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளின் புனிதத்தன்மை அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
  இந்திய அரசமைப்புச் சட்டம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதில், எந்த அரசியல் கட்சிகளின் பெயர்களோ அல்லது சின்னங்களோ குறிப்பிடப்படவில்லை.
  25 வயதுக்கு அதிகமானோர் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். கடந்த 6 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்களை எழுதி வருகிறேன். அதில், தேர்தலில் கட்சிகளின் சின்னங்களை நீக்குமாறு வலியுறுத்தினேன். அரசமைப்புச் சட்டம் தனிநபர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது.
  எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்களின் புகைப்படம், பெயர் ஆகியவை மட்டுமே போதும். சின்னம் என்பதே தேவையில்லை.
  கடந்த 1952 தேர்தலில் பிரிண்டிங் தொழில்நுட்பம் மேம்பட்ட வகையில் இல்லை. அதனால், சின்னங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் சின்னங்கள் தேவையில்லை. சின்னங்கள் இருப்பதால் தகுதியற்ற நபர்கள் சட்டம் இயற்றும் இடங்களுக்கு செல்ல நேரிடுகிறது.
  சின்னங்கள் நீக்கப்பட்டால் தகுதியான வேட்பாளர்களை மக்கள் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படும். நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களை வாக்குக்காக பயன்படுத்திக் கொள்வது வேதனை அளிக்கிறது. 
  பல்வேறு விவகாரங்கள் குறித்து நான் அனுப்பிய 32 கடிதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. மத்திய அரசு லோக்பால் அமைப்புக்கு அண்மையில் தலைவரை நியமித்ததில் என்னுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. இருந்தாலும், இந்த அமைப்பால் ஊழல்களை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்றார் ஹசாரே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai