சுடச்சுட

  

  நேரு குடும்பத்தின் தற்போதைய வாரிசால் காங்கிரஸூக்குப் பின்னடைவு: அருண் ஜேட்லி

  By DIN  |   Published on : 21st April 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ARUNJAITLEY_EPS554445

  காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் தற்போதைய வாரிசு சொத்தாக இருப்பதைவிட சுமையாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.
  இதுகுறித்து, தனது வலைதளப் பக்கத்தில் அருண் ஜேட்லி சனிக்கிழமை எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:
  இந்த மக்களவைத் தேர்தலின் முதல் இரு கட்ட வாக்குப் பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. இந்தச் சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரம் தெளிவான பாதையில் செல்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை முன்னிறுத்திய அந்தப் பிரசாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்று வருகிறது.
  மத்திய அரசின் கடந்த ஐந்து ஆண்டு கால சாதனைகளை சுட்டிக் காட்டுவதோடு, வறியவர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் முன்னேற்றம், ஊழலற்ற ஆட்சி, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பாஜகவின் தேர்தல் பிரசாரம் அமைந்துள்ளது.
  ஆனால் காங்கிரúஸா, போலி பிரச்னைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கடந்த ஓராண்டாக பிரசாரம் செய்து வருகிறது. அது தோல்வியடைந்ததால், மக்களிடம் எடுபடாத தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  ஒரே ஒரு குடும்பத்தை மட்டும் நம்பி அந்தக் கட்சி செய்து வரும் பிரசாரம் தோல்வியடைந்து வருகிறது.
  பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் நேரடி போட்டி நிலவும் இடங்களில், பாஜக மிகுந்த சாதகமான இடத்தைப் பெறுகிறது.
  காங்கிரஸ் கட்சியில் பல காலமாக இருந்த பல முக்கிய நபர்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுகிறார்கள். அதற்கு, அந்தக் கட்சித் தலைமையில் அதிகாரப் போக்கு காரணமாக இருக்கும். வாரிசுகள் தலைமையை தக்க வைக்க வேண்டுமென்றால் எதேச்சதிகாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதே நேரம், அந்தத் தலைமைக்கு வசீகரமும் இருக்க வேண்டியுள்ளது.
  தற்போதைய நிலையில், வெறும் 44 அல்லது 60 மக்களவைத் தொகுதிகளையே வெல்லக் கூடிய வாரிசு தலைமையால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன பலன் என்று கேள்வி எழுகிறது.
  உண்மையில், நேரு குடும்பத்தின் தற்போதைய வாரிசு, காங்கிரஸ் கட்சிக்கு சொத்தாக இருப்பதை விட சுமையாகத்தான் இருக்கிறது.
  வாரிசு அரசியலைப் போலவே, ஜாதி அரசியலையும் மக்கள் நிராகரித்து வருகிறார்கள். இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகள் கடந்த மக்களவைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளதே இதற்குச் சான்றாகும் என்று தனது கட்டுரையில் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai