தியாகிகளை யாரும் அவமதிக்கக் கூடாது: உத்தவ் தாக்கரே

தாய்நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளை அவமதிக்கும் வகையில் யாரும் கருத்துக் கூறக் கூடாது என்று சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தியாகிகளை யாரும் அவமதிக்கக் கூடாது: உத்தவ் தாக்கரே

தாய்நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளை அவமதிக்கும் வகையில் யாரும் கருத்துக் கூறக் கூடாது என்று சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
2008-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குரைக் குறிப்பிட்டு, உத்தவ் தாக்கரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறுகையில், "தாய்நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளை அவமதிக்கும் வகையில் யாரும் கருத்துக் கூற கூடாது. ஆனால் சாத்வி தவறாக தெரி
வித்து  விட்டார். அதற்காக மன்னிப்பும் கேட்டு விட்டார்' என்றார்.
இதனிடையே சாத்வி கருத்து குறித்து மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், "மும்பை வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கர்கரே மிகவும் தைரியமான காவல் துறை அதிகாரி. அவரது தியாகத்துக்காக அவர் என்றும் போற்றப்படுவார். சாத்வி கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த கருத்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தினால் வெளியானது. அந்தக் கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் இது மாதிரியான கருத்துகளை யாரும் தெரிவிக்கக் கூடாது' என்றார்.
முன்னதாக, "மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையில், என்னை துன்புறுத்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே, நான் சபித்த காரணத்தால் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார்' என்று  போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான சாத்வி பிரக்யா சிங் தாக்குர் கூறினார். அந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com