தேர்தல் தோல்வி பீதியால் பாதிக்கப்பட்டுள்ளார் மோடி: மம்தா பானர்ஜி

தேர்தல் தோல்வி பீதியால் பாதிக்கப்பட்டுள்ளார் மோடி: மம்தா பானர்ஜி

தேர்தல் தோல்வி பீதியால் பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்டுள்ளார் என்று மேற்கு வங்கத்தின் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி பீதியால் பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்டுள்ளார் என்று மேற்கு வங்கத்தின் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பனிஹடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார க் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தேர்தல்களில் தனக்கு தோல்வி உறுதி என்பது மோடிக்கு தெரியும். அதனால்தான் அவரது முகம், வெளிறி போயுள்ளது. அதேபோல், தேர்தல் தோல்வி பீதியாலும் மோடி பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், புது தில்லி, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஒடிஸா மற்றும் பிற பகுதிகளை இழப்பதை நினைத்து ஒவ்வொரு நாளும் அவர் முட்டாள்தனமாக பேசி வருகிறார்.
மேற்குவங்கத்தை குறிவைத்து அவர் பிரசாரம் செய்கிறார். ஹிந்து-முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தி, வாக்குகளை பெறலாம் என மோடி நம்புகிறார்.
மோடியை எதிர்த்து பேசுவது நான் மட்டும்தான். இதனால் மம்தா பானர்ஜியை கட்டுக்குள் வைக்கும்படி மோடியை ஆர்எஸ்எஸ் அறிவுறுத்தியுள்ளது. இதனாலேயே மேற்கு வங்கத்தை மோடி சுற்றி சுற்றி வருகிறார். மக்களவைத் தேர்தல், மோடியின் செயல்பாட்டுக்கான தேர்தலை தவிர; எனது செயல்பாட்டுக்கான தேர்தல் கிடையாது. இதனால் மேற்குவங்கத்தில் 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? என அவர் கேள்விக் கேட்கக் கூடாது. நான்தான், மத்தியில் ஆட்சியிலிருந்த காலத்தில் என்ன பணிகளை செய்துள்ளீர்கள் என அவரிடம் கேள்வி கேட்க வேண்டும். ஒருவேளை மாநிலத்தில் நான் சரியாக பணியாற்றவில்லையெனில், மக்கள்தான் என்னிடம் கேள்விக் கேட்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் உலகம் முழுவதும் மோடி சுற்றுப்பயணம் செய்தார்.
ஆனால் பசுப்  பாதுகாப்பு என்ற பெயரில் சாமானிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தவிர, வேறு எந்த பணியையும் மோடி செய்யவில்லை என்றார் மம்தா.
பகுடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பேசுகையில், "மிகப்பெரிய பொய்யர் என்ற விருது, பிரதமருக்கு அளிக்கப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் 1 லட்சம் துர்க்கை பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் மக்கள், லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை, காளி பூஜை என்ற பல்வேறு பெயர்களில் பூஜைகளை நடத்தி வருகின்றனர். 
அப்படியிருக்கையில், துர்க்கை பூஜை நடத்த அனுமதி தரவில்லை என்று மோடி பொய் தெரிவிக்கிறார். பொய்களை தெரிவிக்கவும் ஒரு வரம்பு உள்ளது. ரயில்வே அமைச்சராக இருந்தபோது, மேற்குவங்கத்துக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார். 
அதேவேளையில் மேற்குவங்கத்துக்கு அவர் என்ன செய்துள்ளார். ஒரு ரயிலை கூட புதிதாக அவர் விடவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com