பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட காவல் அதிகாரி ஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குருக்கு தேர்தல் ஆணையம்
பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட காவல் அதிகாரி ஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
போபாலில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சாத்வி பிரக்யா, "மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்தபோது என்னை மிகவும் துன்புறுத்திய ஹேமந்த் கர்கரேவை நான் சபித்தேன். அடுத்த ஒரு மாதத்
தில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்' என்றார்.
இவரது கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், சர்ச்சை கருத்து தொடர்பாக விளக்கம்கேட்டு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாமாக முன்வந்து சாத்வி பிரக்யா கருத்து தெரிவித்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளோம். இதுதொடர்பாக உதவி அதிகாரியிடம் அறிக்கை கோரியிருந்தோம். அவர் சனிக்கிழமை காலை அறிக்கையை சமர்ப்பித்தார். சாத்வி பிரக்யாவுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.  தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறக் கூடாது என்று கூறிதான் சாத்வி பிரக்யா பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
சாத்வியின் கருத்து கட்சியின் கருத்தல்ல; அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com