மதரீதியில் தேர்தல் பிரசாரம்: சித்துவுக்கு நோட்டீஸ்

தேர்தல் பிரசாரத்தில் மதரீதியில் வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மதரீதியில் தேர்தல் பிரசாரம்: சித்துவுக்கு நோட்டீஸ்

தேர்தல் பிரசாரத்தில் மதரீதியில் வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிகார் மாநிலம், பல்ராம்பூர் தொகுதிக்குட்பட்ட கதிகாரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சித்து பேசியபோது, அங்குள்ள முஸ்லிம்களிடம் பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
மதரீதியில் பிரசாரம் செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியை முஸ்லிம்கள் தோற்கடிக்க வேண்டும் என சித்து கேட்டுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகாரின்பேரில், பிகார் மாநிலம் கதிகாரில் இந்திய தண்டனையியல் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சித்துவுக்கு தேர்தல் ஆணையமும் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், "தேர்தல் நடத்தை விதிமீறல், தேர்தல் சட்டம், உச்சநீதிமன்றம் உத்தரவு ஆகியவற்றை சித்து மீறியதற்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.ஆதலால் சித்து தமது கருத்து குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும். அவ்வாறு பதிலளிக்க சித்து தவறும்பட்சத்தில், முன்தகவல் தெரிவிக்காமலேயே, அவருக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com