ரயில்வே சட்ட விதிகள் மீறல்: 17,000 பேர் மீது நடவடிக்கை

நிகழாண்டின் முதல் மூன்று மாதங்களில் ரயில்வே சட்ட விதிகளை 17 ஆயிரம் பேர் மீறியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
ரயில்வே சட்ட விதிகள் மீறல்: 17,000 பேர் மீது நடவடிக்கை

நிகழாண்டின் முதல் மூன்று மாதங்களில் ரயில்வே சட்ட விதிகளை 17 ஆயிரம் பேர் மீறியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த விதி மீறலில் ரயிலின் அவசரகாலச் சங்கிலியைப் பிடித்து இழுத்தல், போலி டிக்கெட்டுகள் விற்பனை, பெண்கள் பெட்டிகளில் அமர்ந்து பயணித்தல் உள்ளிட்டவை அடங்கும். இது தவிர, ரயில் நிலைய ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளில் புகைப்பிடித்ததாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ரயில்வே பாதுகாப்புப் படையின் புள்ளிவிவரத் தகவலின்படி, ஓடும் ரயிலின் அவசரகாலச் சங்கிலியைப் பிடித்து இழுத்ததாக  1,693 பேர் பிடிபட்டுள்ளனர்.

விதிகளை மீறி மின்னணு டிக்கெட்டுகளை விற்றதாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிகளை மீறி தண்டவாளத்தைக் கடந்ததாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 9 ஆயிரம் பேர் பிடிபட்டுள்ளனர்.  தில்லி காவல் துறை தகவலின்படி,  நிகழாண்டு ஜனவரியில் ரயில் விபத்தில் 65 ஆண்களும், 8 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.  மேலும், ரயில்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பயணம் செய்ததாக  6,441 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் புகைப்பிடித்ததாக 12,944 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மூத்த கோட்ட காவல் ஆணையர் (ஒருங்கிணைப்பு)  டாக்டர் ஏ.என். ஜா கூறுகையில், "ரயில்வே பகுதியை சமூக விரோத சக்திகள், விரும்பத்தகாத சக்திகள் இல்லாமல் வைத்திருக்கச் செய்வதுதான்  ரயில்வே துறையின் நோக்கமாகும். சட்ட நடவடிக்கையுடன், ரயில்வே சட்டத்தின் தண்டனைப் பிரிவுகள் தொடர்பாக பயணிகளுக்கு விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர்.

ரயில்வே துறையின் விதிகளை பயணிகள் கடைப்பிடித்து கண்ணியமான பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். போலி ஏஜெண்டுகளிடமிருந்து பயணச் சீட்டுகளைப் பெறுவது சட்டவிரோதமாகும். அதேபோன்று,  அங்கீகாரமற்ற வியாபாரிகளிடமிருந்து உணவுப் பொருள்களை வாங்கிச் சாப்பிடக் கூடாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com