அம்மன் கோயிலில் 'நெருப்பு வீசும் அக்னி விளையாட்டு' வழிபாடு!

அம்மன் கோயிலில் விநோதமாக நெருப்பு வீசி வழிபடும் முறையின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அம்மன் கோயிலில் 'நெருப்பு வீசும் அக்னி விளையாட்டு' வழிபாடு!

அம்மன் கோயிலில் விநோதமாக நெருப்பு வீசி வழிபடும் முறையின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கதீல் எனும் ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி தேவி கோயில் மிகப் பிரபலம்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 8 நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழாவில் நெருப்பு வீசும் வழிபாடு (அக்னி கேலி அல்லது தூதிதாரா) முறை மிகவும் பிரபலம். இதில் அருகிலுள்ள அதூர் மற்றும் கொடதூர் கிராமங்களைச் சேர்ந்த பலநூறு பேர் கலந்துகொள்வார்கள். 

இந்த அக்னி வீசும் வழிபாட்டில் ஆண்கள் அனைவரும் வேட்டி அணிந்து கலந்துகொள்வார்கள். அப்போது இரு குழுவைச் சேர்ந்தவர்கள் 15 முதல் 20 மீட்டர் இடைவெளியில் நின்றுகொண்டு ஒருவர் மீது ஒருவர் நெருப்பு வீசி விளையாடுவார்கள்.

இதில் ஒருவர் மீது 5 முறை மட்டுமே அந்த நெருப்பு பந்தை வீச வேண்டும் என்பது விதி. இதில் ஏற்படும் தீக்காயத்துக்கு அக்கோயிலின் மஞ்சள், குங்குமம் அடங்கிய நீரை தெளிப்பதன் மூலம் குணமாகும் என்பது அவர்களது நம்பிக்கை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com