சுடச்சுட

  

  பிரச்னையான கடைசி நாள் பிரசாரம்: கேரளாவில் எல்டிஎஃப், யூடிஎஃப் இடையே வன்முறை

  By DIN  |   Published on : 22nd April 2019 06:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ldf,_udf_violence

   

  மக்களவைத் தேர்தலின் கடைசி நாள் பிரசாரத்தின் போது கேரள மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வன்முறை ஏற்பட்டது.

  கேரள மாநிலத்துக்கான மக்களவைத் தேர்தல் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அங்கு ஞாயிற்றுக்கிழமையுடன் பிசாரம் ஓய்ந்தது.

  இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி கட்சியினருக்கு இடையே கொல்லம் பகுதியிலுள்ள போயப்பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கினர். மேலும் அங்குள்ள கடைகள் மற்றும் பொருட்களையும் அடித்து நாசமாக்கினர்.

  இதையடுத்து அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், லத்தியால் தாக்கியும் கலவரத்தை கட்டுப்படுதிய போலீஸார், அவர்களை விரட்டியடித்தனர்.

  இதனால் அந்த மாநிலம் முழுவதும் இந்த வன்முறை சம்பவம் பிரதிபலித்தது. ஆங்காங்கே இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களிடையே பிரச்னை ஏற்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai