மேற்கு வங்கத்தில் மோடி போட்டி? அமித் ஷா விளக்கம்

மேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியதற்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கமளித்தார்.
மேற்கு வங்கத்தில் மோடி போட்டி? அமித் ஷா விளக்கம்

மேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியதற்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கமளித்தார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா பேசியதாவது:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் கீழ் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள், ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று அனைவருக்கும் இந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக-வின் சங்கல்ப பத்திரத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம். 

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முதலில் தாக்கல் செய்யப்படும். அதன்மூலம் நாட்டிலுள்ள அகதிகள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத்தரப்படும். பின்னர் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஏற்படுத்தப்படும். எனவே அதுகுறித்து அகதிகள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. இதனால் நாடு முழுவதும் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அடையாளம் காணப்படுவார்கள்.

மேற்கு வங்கத்தில் சரஸ்வதி பூஜையும், துர்கா பூஜையும் மீண்டும் உரிய மரியாதையுடன் நடத்த பாஜக-வால் மட்டுமே முடியும். மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com