ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி 

மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி 

புது தில்லி: மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட கூடாது; அதற்காக  மக்களின் வரிப்பணத்தை தமிழக அரசு செலவிட கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 23-1-2019 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னதாகவே அவர் இறந்து விட்டார்; எனவே மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து  தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கானது திங்களன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது  எங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் படி விசாரணை நடத்தப்பட்டது; எனவே இந்த விவகாரத்தில் முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் நாங்கள் தலையீடு செய்ய விரும்பவில்லை. எனவே, இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபத்தைகள் உத்தர விட்டனர்.

அத்துடன் இதே விவகாரத்தை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் வேறு முறையீடுகள் ஏதும் இருந்தாலும் அவையும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவே கருதப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள்  தீர்ப்பில் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com