நீதித்துறைக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நேரமிது: ஜேட்லி

நீதித்துறைக்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நேரமிது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ள
நீதித்துறைக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நேரமிது: ஜேட்லி

நீதித்துறைக்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நேரமிது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ள நிலையில் ஜேட்லி இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக தனது வலைப்பூவில் அவர் கூறியுள்ளதாவது:
தனிப்பட்ட நடத்தை, மதிப்பு, பண்பு ஆகியவற்றில் நமது உச்சநீதிமன்றத்தின் இப்போதைய தலைமை நீதிபதி மிகவும் சிறந்தவர். அவரது நீதிமன்றப் பணிகள், தீர்ப்புகள் குறித்து ஏதேனும் கருத்து வேறுபாடுகள், குறைகூறல்களும் இருக்கலாம். ஆனால், அவரது நன்நடத்தை என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. அதிருப்தியில் இருந்த ஒருவர் கூறிய உரிய ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சுமக்க வேண்டிய நிலை தலைமை நீதிபதிக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பிரச்னைகளை எழுப்பி நீதித்துறையின் மாண்பைக் குலைக்க யார் முயற்சி செய்தாலும் அது நடக்காது. இந்த விஷயத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கவே செய்யும் என்று ஜேட்லி கூறியுள்ளார்.
முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்தார். எனினும், அவை அடிப்படையற்றவை என்றும், இதன் பின்னணியில் மாபெரும் சதி இருக்கிறது என்றும் நீதிபதி கோகோய் மறுப்புத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com