ராகுல் வேட்புமனு: தகல்கள் அனைத்தும் சரியாக உள்ளன: அமேதி தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்

உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில், அனைத்து
ராகுல் வேட்புமனு: தகல்கள் அனைத்தும் சரியாக உள்ளன: அமேதி தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்


உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில், அனைத்து தகவல்களும் சரியாக இருப்பதாக அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரது குடியுரிமை, கல்லூரியில் பெற்ற பட்டம் ஆகியவை சந்தேகத்துக்கு இடமான வகையில் இருப்பதாக அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சை வேட்பாளர் துருவ் ராஜ் உள்பட நால்வர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில், ராகுல் காந்தி, பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதலீடு செய்தார். அந்த நிறுவன அதிகாரிகள் ராகுல் காந்தி பிரிட்டனைச் சேர்ந்த குடிமகன் என்று கூறுகின்றனர். மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், பொருளாதார மேம்பாடு பாடப்பிரிவில் முதுகலை ஆய்வுப் பட்டம் பெற்றதாகத் தனது வேட்புமனுவில் ராகுல் முதலில் குறிப்பிட்டிருந்தார். பின்னர், மேம்பாட்டுப் பாடப்பிரிவிலேயே பட்டம் பெற்றதாக அவர் தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகார் தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி ராம் மனோகர் மிஸ்ரா திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ராகுலின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அவரது வேட்புமனு தொடர்பாக எழுப்பப்பட்ட ஆட்சேபங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரியின் விசாரணையின்போது, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.சி.கெளசிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுப்புவது அடிப்படை ஆதாரமற்றது என்று எங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதைத் தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரிக்க முடியாது என்றும் எங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பிரிட்டனில் இருந்ததாகக் கூறப்படும் நிறுவனம் கடந்த 2009-ஆம் ஆண்டே மூடப்பட்டு விட்டது. அதனுடன் தொடர்பில் இருந்த 5 ஆண்டுகளில் பெற்ற சொத்து மதிப்பு ராகுலின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1995-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ராகுல் காந்தி முதுகலை ஆய்வுப் பட்டம் பெற்றார். அதற்கான நகல் வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com