Enable Javscript for better performance
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: லெப்டினென்ட் ஜெனரல் தில்லான்- Dinamani

சுடச்சுட

    

    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: லெப்டினென்ட் ஜெனரல் தில்லான்

    By DIN  |   Published on : 24th April 2019 10:27 PM  |   அ+அ அ-   |    |  

    Dhillon_Kashmir_DGP


    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். 

    லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான், காஷ்மீர் டிஜிபியுடன் இணைந்து இன்று செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது தெரிவித்த அவர்,

    "இந்த ஆண்டு மொத்தம் 69 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், 12 பேர் கைது செயய்ப்பட்டுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 25 பேர் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அந்த 25 பேரில் 13 பேர் பாகிஸ்தானியர்கள், 13 பேர் A+ பிரிவு பயங்கரவாதிகள் ஆவர். 

    தற்போதைய சூழலில், இந்த பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்கு தலைமை ஏற்க யாரும் முன்வரவில்லை. பாகிஸ்தானின் சிறப்பான முயற்சிகளுக்கு பிறகும், நாங்கள் தொடர்ந்து ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பை ஒடுக்குவோம். குறிப்பாக புல்வாமா தாக்குதலுக்கு பிறகு. 

    எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே எங்களது நடவடிக்கைகள் முழு வீரியத்துடன் தொடரும். முன்பு இருந்தது போல் அல்லாமல் இந்த பகுதியில் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம்.

    யார் துப்பாக்கியை ஏந்தினாலும் அழிக்கப்படுவார்கள்" என்றார். 

    காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் பேசுகையில், 

    "கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மொத்தம் 46 ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 27 பேர் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பச் சேர்ந்தவர்கள், 19 பேர் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். 

    சட்டம் ஒழுங்கு பிரச்னையில் 2018-ஆம் ஆண்டு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. பயங்கரவாதத்தை கையாண்டவிதமும் வெற்றிகரமாக உள்ளது" என்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp