2023ஆம் ஆண்டுக்குள் நக்ஸல்கள் முழுமையாக ஒழிக்கப்படுவர்

வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் பயங்கரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் 2023ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் பயங்கரவாதிகள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம், ஹுசைனாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: பயங்கரவாதிகளும், கிளர்ச்சியாளர்களும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமானால் இவர்களை ஒடுக்க வேண்டும். ஜார்க்கண்டில் நக்ஸல் பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளிடம் தகுதியான நபர் யாரும் இல்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள் எண்ணிக்கையை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. தாக்குதல் நடத்துவது மட்டும் தான் விமானப் படையின் பணி. எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தார்கள் என்பதை எண்ணுவது அவர்கள் பணி அல்ல என்றார் ராஜ்நாத் சிங்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பாலாமாவ் (தனி) மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வி.டி.ராமை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தத் தொகுதிக்கு வரும் 29-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com