அக்சய் குமாருடனான உரையாடலில் மோடி சொன்ன முக்கிய விஷயங்கள்!

நடிகர் அக்சய் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடியின் உரையாடல் நிகழ்ச்சிதான் இன்றைய ஹைலைட். இது முழுக்க முழுக்க அரசியல் அல்லாத பேட்டி என்பதால் பொதுமக்களும் மோடி என்னதான் சொல்லியிருக்கிறார் 
அக்சய் குமாருடனான உரையாடலில் மோடி சொன்ன முக்கிய விஷயங்கள்!


நடிகர் அக்சய் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடியின் உரையாடல் நிகழ்ச்சிதான் இன்றைய ஹைலைட். இது முழுக்க முழுக்க அரசியல் அல்லாத பேட்டி என்பதால் பொதுமக்களும் மோடி என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதை அறிய ஆவலாகவே இருக்கிறார்கள்.

அவர்களது ஆவலை நாம் சும்மா விட்டுவிட முடியுமா? அப்படி மோடி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று சொல்வது நமது கடமையல்லவா? வாருங்கள் அவரது பேட்டியின் முக்கிய அம்சங்களை மட்டும் உங்களுக்காக இங்கே தருகிறோம்.

பிரதமர் கனவு..
நான் பிரதமராவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. என்னைப் போன்று ஒரு சாமானியன் அதுவும் எந்த அரசியல் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த யாருக்குமே அந்த எண்ணம் வராது. நான் ஒரு சாதாரண வேலையில் சேர்ந்திருந்தால் கூட எனது தாய் அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்திருப்பார்.

தாயைப் பற்றி..
நான் என்னுடன் வந்து தங்கியிருக்குமாறு எனது தாயை தற்போது அழைத்தாலும் கூட, அவர் அந்த கிராமத்தில் வாழவே ஆசைப்படுகிறார். அதோடு, அவருடன் என்னால் போதிய அளவு நேரத்தை செலவிடவும் முடியாதல்லவா?

அரசியல் நண்பர்கள்..
நிச்சயம் இதை நான் சொல்லும் போது மக்கள் ஆச்சரியப்படுவார்கள். தேர்தல் நேரம் என்பதால் இதை நான் சொல்லவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் எதிர்க்கட்சியிலும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மமதா பேனர்ஜி எனக்கு இனிப்புகளை அனுப்புவார், ஆண்டு தோறும் அவரே தேர்வு செய்து குர்தாக்களையும் எனக்கு அனுப்பி வைப்பார்.

மீம்ஸ்களைப் பற்றி..
டிவிட்டர் போஸ்டுகளையும் நான் படிப்பேன். அதில் வரும் மீம்ஸ்களையும் ரசிப்பேன். மோடி என்பதை மறந்து அதில் இருக்கும் திறமையை ரசிப்பேன். சமூக ஊடகங்களால் நல்ல பலன் என்னவென்றால் சாதாரண மனிதனின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார் மோடி.

விளையாட்டாக பேச பயம்
முன்பெல்லாம் நான் பேசும் போது சின்ன சின்ன நகைச்சுவைகளை சேர்த்துக் கொள்வேன். அப்படி பேசுவது என் இயல்பும் கூட. ஆனால் தற்போது அப்படி பேசுவதற்கு பயமாக இருக்கிறது. அதாவது நான் பொதுக் கூட்டங்களிலோ நிகழ்ச்சியிலோ பேசும் போது ஏதேனும் நகைச்சுவையாகக் கூறினால், ஊடகங்கள் தங்களது டிஆர்பிக்காக நான் நகைச்சுவையாக அல்லது விளையாட்டாக எதையாவது கூறினால், அந்த வாக்கியத்தில் இருந்து ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக் கூறி பிரதமர் மோடி இப்படி பேசினார் என்று  செய்தி வெளியிட்டு டிஆர்பி-யை ஏற்றுகிறார்கள். இதனால் நகைச்சுவையாக பேசுவதற்கே பயமாக இருப்பதால் அப்படி பேசுவதையே நிறுத்திவிட்டேன் என்று கூறுகிறார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com