உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரம்: 3 நீதிபதிகள் குழு விசாரிக்கிறது

உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தவுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரம்: 3 நீதிபதிகள் குழு விசாரிக்கிறது

உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தவுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அடுத்து மூத்த நீதிபதியாக திகழ்பவர் எஸ்.ஏ. போப்டே. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகார் குறித்து போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தவுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு போப்டே அளித்த பேட்டி வருமாறு: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தனக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு என்னை நியமித்துள்ளார். நானும், உச்சநீதிமன்றத்தில் எனக்கு அடுத்து மூத்த நீதிபதியாக விளங்கும் என்.வி.  ரமணா, பெண் நீதிபதியான இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழுவை விசாரணைக்கு ஏற்படுத்த முடிவு செய்துள்ளேன். தலைமை நீதிபதிக்கு எதிராக புகார்கள் தெரிவித்து நீதிபதிகளுக்கு கடிதம் எழுதிய பெண்ணுக்கு ஏற்கெனவே நான் நோட்டீஸ் அனுப்பி விட்டேன்.
இந்த விவகாரம் குறித்த முதல் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த விசாரணையானது, வழக்கமான விசாரணை போல இருக்காது. இருதரப்பு சார்பாக வழக்குரைஞர்கள் யாரும் வாதிட மாட்டார்கள். பிரத்யேக அறையிலேயே விசாரணை நடத்தப்படும். விசாரணையை முடிப்பதற்கு கால அளவு எதுவும் நிர்ணயிக்கவில்லை. விசாரணையின் முடிவில் தெரிய வரும் உண்மையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எஸ்.ஏ. போப்டே.
முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினார். இந்தக் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மறுத்திருந்தார். மேலும், தலைமை நீதிபதியின் அலுவலகத்தை மிகப்பெரிய சக்திகள் முடக்க விரும்புவதாகவும், அந்த சக்திகளே, இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com