குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் சன்னி தியோல் போட்டி

குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் சன்னி தியோல் போட்டி

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நடிகர் சன்னி தியோலை பாஜக அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நடிகர் சன்னி தியோலை பாஜக அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் ஹிந்தி நடிகர் சன்னி தியோல் பாஜவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார். இதைத் தொடர்ந்து, அன்றைய தினமே அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், புணே விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சன்னி தியோல் சந்தித்து பேசினார். அவர் பாஜகவில் இணையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அவர் அக்கட்சியில் இணைந்தார்.
தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது தந்தை தர்மேந்திரா, முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான மறைந்த வாஜ்பாயுடன் நெருங்கி பழகினார். தற்போது பிரதமர் மோடியை ஆதரிக்க நான் வந்துள்ளேன். இந்தக் குடும்பத்துக்காக (பாஜக) என்னால் என்ன செய்ய முடியுமே அதை செய்வேன் என்றார் சன்னி தியோல்.
தாமினி, காயல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சன்னி தியோல்.
நடிகர் வினோத் கன்னா, குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்தார். நிர்மலா சீதாராமன் கூறுகையில், "சன்னி தியோல் கட்சியில் சேரப் போகிறார் என்பது தெரிந்ததும், அவர் நடிப்பில் வெளியான "பார்டர்' திரைப்படம் குறித்து நினைவு வந்தது. தேசப்பற்று மிகுந்த திரைப்படம் "பார்டர்'. பிரதமர் மோடி மக்களுக்கு நன்மை செய்து வருவதை சன்னி தியோல் புரிந்துகொண்டிருக்
கிறார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com