ஜப்பான்: உள்ளாட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதல்முறையாக வெற்றி

ஜப்பானில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எடோகாவா வார்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா வெற்றி பெற்றார். ஜப்பானில் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் இவர்தான்.
ஜப்பான்: உள்ளாட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதல்முறையாக வெற்றி

ஜப்பானில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எடோகாவா வார்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா வெற்றி பெற்றார். ஜப்பானில் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் இவர்தான்.
ஜப்பானில் செயல்பட்டுவரும் "ஆஸாஹி சிம்பன்' செய்தி வலைதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜப்பானில் கடந்த 21ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம், 2,26,561 வாக்குகள் பதிவானது.
எடோகாவா வார்டு தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  புராணிக் யோகேந்திரா 6,447 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஜப்பானில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முதலாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இவரே என்று அந்த இணையதளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பு ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்ற புராணிக் யோகேந்திரா கூறுகையில், "ஜப்பானியர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் பாலமாகத் திகழ்வேன்' என்றார்.
ஜப்பானில் சுமார் 34,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். எடோகாவா வார்டுக்கு உள்பட்ட பகுதியில் சீனா மற்றும் கொரியாவைச் சேர்ந்தவர்களும் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.
1997ஆம் ஆண்டு ஜப்பானுக்கு முதல் முறையாக வந்தார் யோகேந்திரா. அப்போது அவர் இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அதனால், 2 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். 
பின்னர், பொறியாளராக ஜப்பானில் பணிபுரிய மீண்டும் வந்தார். பின்னர், வங்கியிலும், வேறு சில நிறுவனங்களிலும் அவர் பணிபுரிந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் எடோகாவாவில் வசித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com