கூடுதல் தொழில்நுட்பத் திறன் இருந்திருந்தால் பாகிஸ்தானை இன்னும் சேதப்படுத்தியிருப்போம்: இந்திய விமானப் படை

"எங்களிடம் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்கள் இருந்திருந்தால், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மோதலில் பாகிஸ்தானுக்குக் கூடுதல் சேதம் விளைவித்திருப்போம்' என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
கூடுதல் தொழில்நுட்பத் திறன் இருந்திருந்தால் பாகிஸ்தானை இன்னும் சேதப்படுத்தியிருப்போம்: இந்திய விமானப் படை

"எங்களிடம் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்கள் இருந்திருந்தால், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மோதலில் பாகிஸ்தானுக்குக் கூடுதல் சேதம் விளைவித்திருப்போம்' என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
அதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி குண்டுவீச்சு நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவின. அந்த விமானங்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப் படையின் மிக்-21 விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனினும், அந்த விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்துத் தப்புவதற்கு முன்னர் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இச்சம்பவங்கள் தொடர்பான இந்திய விமானப் படையின் ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது: 1999-ஆம் ஆண்டின் கார்கில் போருக்குப் பிறகு, பாகிஸ்தான் விமானப் படை தனது தொழில்நுட்பத் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
அதே போன்று இந்திய விமானப் படையும் தனது தொழில்நுட்பத் திறனை நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அத்தகைய உயர் வகை தொழில்நுட்பங்கள் இந்தியா விமானப் படையிடம் இருந்திருந்தால், பாகிஸ்தானுடன் அண்மையில் நடைபெற்ற வான் சண்டையின்போது அந்த நாட்டுக்கு இன்னும் கூடுதல் சேதங்களை விளைவித்திருக்க முடியும்.
தற்போதைய நிலையில், விண்ணிலிருந்தபடியே கண்ணுக்குப் புலப்படாத இலக்குகளைத் தாக்கி அழிக்கும் (பிவிராம்) தொழில்நுட்பத் திறன் கொண்ட "ஆம்ராம்' ஏவுகணைகளை பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் பயன்படுத்துகின்றன.
அத்தகைய நவீன தொழில்நுட்பத் திறன் கொண்ட "மீட்டியோர்' ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டால், அது பாகிஸ்தான் விமானப் படைக்கு எதிராக இந்தியாவின் கையை ஓங்கச் செய்யும் என்று விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com