
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது இலங்கை கடல் வழியாக வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நெருங்கும் எனவும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ., வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான தாழ்வுப் பகுதி வடதமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்தால் வரும் 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.