வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயிகளுக்கு சிறையில்லை: ராகுல் காந்தி உறுதி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜாலோரில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கும் முதல்வர் அசோக் கெலாட். உடன் துணை முதல்வர் சச்சின் பைலட்  உள்ள
ராஜஸ்தான் மாநிலம், ஜாலோரில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கும் முதல்வர் அசோக் கெலாட். உடன் துணை முதல்வர் சச்சின் பைலட்  உள்ள

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜாலோரில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
5 ஆண்டுகளுக்கு முன், "நல்ல நாள் வரும்' என்ற முழக்கத்துடன் அவர்கள்(பாஜக) பிரசாரம் செய்தனர். ஆனால், நாட்டு மக்கள் அனைவரும் "காவலனே கள்வன்' என்று தற்போது கூறி வருகிறார்கள்.
ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு-சேவை வரியை அமல்படுத்தியது  ஆகியவை ஏழைகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கொள்ளை அடிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளாகும். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அநீதி இழைத்துவிட்டார். 
பிரதமர் மோடிக்கு நன்றி: காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம், விவசாயிகளுக்கு பலனளிப்பதாக இருக்கும். நாட்டு மக்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வங்கிக் கணக்குகளில்தான் "நியாய்' திட்டத்துக்கான பணத்தை டெபாசிட் செய்யப் போகிறேன். அந்தப் பணம், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டி எளிமையாக்கப்படும், ஒரே ஆண்டில் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். வங்கிக் கடனை செலுத்தாததற்காக, எந்தவொரு விவசாயியும் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள். விவசாயிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படாமல், சிவில் வழக்குகள் பதிவு செய்யப்படும். அனில் அம்பானி, லலித் மோடி, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட 15 தொழிலதிபர்கள், வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவர்களைத்தான் மோடி பாதுகாத்து வருகிறார். அவர்களில் வங்கிகளில் வாங்கிய கடன் தொகை ரூ.5.55 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார் என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com