சுடச்சுட

  

  அமேதி வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த பாஜக சதி: பிரியங்கா காந்தி

  By DIN  |   Published on : 30th April 2019 08:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PriyankaGandhi-Story_03_2wdkyYt


  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதி வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த பாஜக சதித்திட்டம் தீட்டியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கு இன்று (செவ்வாய்கிழமை) வருகை தந்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர், 

  "கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி அமேதியின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து அவர்கள், ராகுல் காந்தி இந்தியரே இல்லை என்று சொல்வார்கள். 

  கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. மத்தியப் பள்ளி தொடங்க அனுமதிக்கப்படவில்லை. 

  ராகுல் காந்தி சிரிக்கத்தக்க எந்த செயலிலும் ஈடுபடவில்லை. உங்களுக்கு மத்தியில் உங்களுடைய நலனுக்காக வேலை செய்கிறார்.

  மறுபுறம் எதிர்மறையான அரசியல் அரங்கேறுகிறது. மக்களை தவறாக வழிநடத்தும் அனைத்து வகையான பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகிறது. ராகுல் காந்தி இந்தியர் இல்லை என்று பொய் பேசுபவர்கள். 

  உங்களுக்கு எங்களது குடும்பம் குறித்து தெரியும். நாங்கள் எந்தவித ஆதாரமும் கொடுக்க அவசியமில்லை. மக்களே எங்களுடைய ஆதாரம்" என்றார். 

  அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai